​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

தொற்றுநோய்த் தடுப்பும் கட்டுப்பாடும் 101 ​ ​


​​ ​​​​​ ​​​​​ Get Free Access!​
​​​

பாடநெறி பற்றிய குறிப்புகள்​​​

புதிய கொரோனா கிருமியால் பரவும் தொற்று நோய், உலக சுகாதார அமைப்பால் "கோவிட்-19" என மறுபெயரிடப்பட்டது. இது உலகளாவிய ரீதியில் கவலையையும் அலாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நோயினால் ஏற்படும் இறப்புகள் காரணமாக அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட முறையாக நல்ல தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகள் விளங்குகின்றது ​

இந்த பாடநெறி உங்களுக்கு உதவியாக இருக்குமா?​

தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பான அறிவையும் திறன்களையும் பொது மக்களுக்கு அறிவித்து புதுப்பிப்பதற்காக இந்த கற்கை நெறியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரு பிரதான தலைப்புக்களை உள்ளடக்குகின்றது. 

1) தொற்று கடத்தப்படுதல் 

அமர்வு 1: நோய்த்தொற்றின் சங்கிலி 

அமர்வு 2: தொற்று நோய்கள் கடத்தப்படுதல் 

2) தொற்றினை கட்டுப்படுத்தல் 

அமர்வு 1: கைச்சுத்தத்தின் மூலமான தடுப்பு 

​அமர்வு 2: தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணத்தை அணிந்து கொள்வதன் மூலமான தடுப்பு

Course Curator

School of Health Sciences

School of Health Sciences, Ngee Ann Polytechnic

The School of Health Sciences (HS) 2005 முதல் உயர் தகுதி வாய்ந்த, கருணையுள்ள சுகாதார வல்லுநர்களை சமூக தேவைகளுக்கு சேவை செய்வதற்காக வளர்த்துள்ளது. சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பொது மற்றும் தனியார் சுகாதார வழங்குநர்களுடன் பள்ளி நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகிறது.​